!!!====(((காகம்)))====!!!

காகம் கரைந்தது...!

அரிசி பருப்பின்றி
புலம்புகிறாள்
ஏழைத்தாய்...
*******************************************

காகம் கரைந்தது...!

இங்கே வராதே போ...
''அநாதை சிறுவன்
அழுகையுடன் விரட்டுகிறான்''

************************************************

காகம் கரைந்தது...!

இது என்னடா
வம்பா போச்சி...

''கஞ்சனின் வருத்தம்''

************************************************

காகம் கரைந்தது...!

ஆமாம் - நீ
தினமும்தான் கத்துற...
என்ன நடந்து போச்சி...?

''முதிர்கன்னியின் முனகல்''

************************************************

காகம் கரைந்தது...!

கல்லெடுத்து விரட்டினான்...

''கறிக்கடை பாய்''

**************************************************

ஏதோ ஒரு வீட்டில்
கா... கா... வென
மனிதர்கள் கத்தினார்கள்...!
உடனே காகம் அங்கு சென்றது
வடை பாயாசத்தோடு
இலையில் சோறு...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (15-Oct-12, 11:17 am)
பார்வை : 184

மேலே