அடுத்ததும் பெண்ணா!! கொன்றுவிடு
விட்டுவிட்டு வாய்(தாய்)மொழி பேசும்
வஞ்சமில்லா வயதினிலே,
வரவு அறியாது
செலவு செய்யவேண்டுமென்று...
மொட்டவிழ்ந்து மங்கையென்று உடல்
மாற்றம் வரும் மேனியிலே,
பட்டுடுத்தி பாட்டெடுத்து
பாட்டு பாட வேண்டுமென்று...
கட்டவிழ்ந்து காதல் கொள்ளும்
கல்லூரிக் கால வயதினிலே,
கட்டழகி கண் பார்த்து
காதல் கள்வன் வருவானென்று..
மெட்டியிட்டு மாலையிட்டு
மணம் முடிக்கும் பொழுதினிலே,
மஞ்சள் பூசி மண சீதனம் தந்து
மணம் முடிக்கவேண்டுமென்று...
உலகை எட்டிப் பார்த்த நாளன்றே,
உடலை உயிர் விட்டுப் போகச் செய்வர் இங்கே...
தொட்டிற் தாலாட்டு பாடுமன்றே,
தூக்கம் நிலையாய்க் கொள்வதென்ன...
தாயின் கெட்டிப் பால் பருகும் முன்னே,
கிழவியின் கள்ளிப் பால் ருசிப்பதென்ன...
வளரா மொட்டு வாடியதங்கே,
வஞ்சனை கொண்ட நெஞ்சங்களிடத்து...
.
.
வலியுடன்!!