என்னாசை புருசா -தேன்மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
அன்புள்ள
கணவா
ஒரு நொடிக்கு
ஆயிரம்முறை காதலிக்கிறேன்
தாலிகட்டி
கைகோர்த்து
என் பெண்மையின்
நாணத்தை சோதனை செய்கிறாய்
பூ சூடி புது புடவை
அணிந்து ஒரு நாளைக்கு
பத்துமுறையாவது
சரி செய்கிறேன்
நீ என்னை ரசிக்க
என்னாசை புருசா
கண்ணாடி கூட கேலி
செய்கிறது என் பெண்மையை ......
நீ வேலை முடிந்து
வீட்டுக்கு வரும் அந்த நொடிக்காக
காலையே ஒத்திகை பார்கிறேன்
உன்னை எப்படி
வரவேற்பது என்று ........
இரவில் கனவிலும்
என்னருகில் நீ வேண்டும்
உறங்காமல் உன்னை
ரசிப்பதில்
இன்பம் எனக்கு...............