பசி

இவ்வளவு இருந்து
எனக்காக ஒருபருக்கை
கூட கிடையாதா ?..........

ஈரத்துணிக்கு கூட
என் வலிதெரியவில்லை

பிச்சை கேட்டால்
இல்லை என்பான்
பணமுள்ள பிச்சைகாரர்களுக்கே
நட்சத்திர ஹோட்டல்கள்..
......இலவசமாக உண்ண.......

மூச்சுவிட்டால் கூட
வயிறு வலிக்குது

பசிக்கு தெரியுமா
நான் ஏழை என்று

பசியே பசிக்காதே
இன்றும் பொறுத்துக்கொள்

என்றாவது வழி பிறக்கும் ........

எழுதியவர் : தேன்மொழி (16-Oct-12, 5:29 am)
Tanglish : pasi
பார்வை : 233

மேலே