எங்கே என் வசந்தகாலம் ? ? ?
நேரசூசி வாழ்வோடும்
தோள்களில் சுமையோடும்
தேடுகிறேன்
சிரிக்க மட்டும் தெரிந்த
என் இதழ்கள் எங்கே?
கண்ணீரின் முகவரி தெரியாத
என் கண்கள் எங்கே?
நகர நெரிசலில் சிக்காத
என் மேனி எங்கே?
நாம் கண்ணாம்பூச்சி ஆடிய
மாமர நிழல் எங்கே?
திருட்டு புளியங்காய் உண்ணும்
கிழவியின் தோட்டம் எங்கே?
பிடித்து விளையாடிய
பட்டாம்பூச்சி எங்கே?
ஆசையாய் வளர்த்த
ஆட்டுக்குட்டி எங்கே?
நட்பால் உலகை உணர்த்திய
நண்பர்கள் எங்கே?
அறிவையும் ஒழுக்கத்தையும் கற்பித்த
என் அன்பின் ஆசான் எங்கே?
ஓடி ஓடி ஒளியும்.....
ஆங்கில பாடம் எங்கே?
ஆள் உயர பிரம்போடிருக்கும்
அதிபர் எங்கே?
பிறந்த நாளின் போது பரிமாறிய
பரிசுப் பொருட்கள் எங்கே?
பாட்டுப் பாடி நாடகம் நடித்த
பாடசாலை மேடை எங்கே?
காற்றில் கலந்த பூ வாசமாய்
கண்ணீரில் நனையாத
கவலையில் கலங்காத
அந்த நாட்களை தேடுகிறேன்......
ஓ........
வாழ்வில் வசந்தம் ஒரு முறையா?