என் சுவாசமாய் இனி எப்போதும் நீ.....!

பொக்கை விழுந்த வாயால்
பொசுக்கென்று நீ கொடுத்த முத்தம் - இப்போதும்
புதுமையாய்.........உணர......மன்னவா....!
பூரித்துப் போகிறேனடா......!

பூத்திருந்த பூங்கொடியை - நீ
பாத்திருந்த வேளையிலே
புகுந்த தென்றலாய் உன்பார்வை
பூட்டி வைத்தேன் என் மேனியிலே.....!

காதலனே.......
காலம் சென்ற பின்னும் நம் காதல்
கட்டுக் குலையாத இளமையோடு இன்னமும்....!

தொட்டு மகிழ்ந்திட கூச்சம் தொன்னூரிலும்.....
காரணம்
தோல் சுருங்கிப் போயிடினும் - இது

ஆத்மாவின் ஆத்மார்த்தமான காதலடா.......!

காதலுக்கு வயது
கட்டுடல் உருகும் வரை அல்ல - அது
கடைசி மூச்சி உள்ளவரை என
காண்பித்த உன்னை இனி
கணப் பொழுதும் நான் பிரியேன்......

என் சுவாசமாய் இனி எப்போதும் நீ.....!

எழுதியவர் : (18-Oct-12, 11:32 pm)
பார்வை : 237

மேலே