தாய்= பெண்ணாய் தோன்றிய மண்ணின் மாணிக்கம்..!
பிறப்பின் ரகசியம்
உன்னில் உணர்ந்தேன்
அன்பின் அவதாரம்
உன்னில் கண்டேன்
ஆசையின் ஆழ்கடல் நீ
உன் அன்பில் வாழும்
சிறு ஜீவன் நான்..!
இன்பத்தின் எதிரொலியே
சந்தோசம் அளிக்கும் சித்திரமே...!
கவிதையின் மொழி நீ
என் கற்பனை உயிர் நீ
முடிவில்லா காவியம்
இருக்கும் என்றால்,
முழுநிலவாய் உதிக்கும்
தாய் நீதானே...!
அறிவின் அலையே
ஆற்றலின் உயிரே...
நீரில்லா கடல்போல்
மாறிவிடுமோ என் வாழ்க்கை
நீ இல்லா நாட்களில்...!
நம்பிக்கை அளித்தாய்
தன்னம்பிக்கைக்கு தீபமிட்டாய்
துன்பத்தை தீயிலிடும்
துணிச்சல் கற்றுத் தந்தாய்
மன்னிக்கும் மனமும்
இரக்கத்தின் குணமும்
உலகிற்கு கற்றுத் தந்தாய்
மழையின் சாரல் நீ
மழை நின்ற பின்னும்
வீசும் மண் வாசம் நீ
சிலையின் உயிர் நீ
சிந்தனை விளக்கு நீ
பெண்ணாய் தோன்றிய
மண்ணின் மாணிக்கமே
அடுத்த பிறவி என்றிருந்தால்
அன்னையாய் நீயே வேண்டும் அம்மா..!!!