அழகின் பெயரால் ஒரு விடியல்! (ரோஷான் ஏ.ஜிப்ரி)

அதிகாலையிலிருந்து ஆர்வம் கொள்
விடிகாலை காண விரும்புவதாய்
கனவு கலை,கண்விழி,கவலை மற

துயரம் சுமந்தது
நேற்றோடு நிறுத்தப்பட்டதாய்
அதிகார பூர்வமாய் அறிவி
அழகின் பதுமை நிறைந்த
ஒரு விடியலில் நீ
இன்று புதிதாய் பிறந்ததாய் புகட்டு
புலர்வின் விசித்திரங்களை
புலன்களால் புகைப்படமெடு
உறக்கம் கலைக்காமல்
உயிர்ஜடமாய்
சொப்பனங்களில் லயித்து
சோம்பேறியானவனுக்கு
புரியும் படி போட்டுகாட்டு
விடியலின் விலாசம் கொடு

ஏசி,இன்டெர் நெற்,"ஸ்கைப்"
எஸ்.எம்.எஸ்,எம்.எம்.எஸ்,ஈ-மெயில்,
"பாஸ்ட் புட்" பணியாரம்
என்பவனுக்கெல்லாம்
ஏறு வெயிலையும்,சோற்றுவயலையும்
காட்டி களத்தில் இறக்கு
சூரியனை சுகம் விசாரி
தாவரங்களை தரிசி
பட்சிகளின் சுறுசுறுப்பை படி
உயிருள்ள ஒலிகள்
வாசல் திறந்து காலைக்கு
வணக்கம் சொல்வதை
பார்த்தாகிலும் நீ பழகு

இறைவனின் படைப்பான இயற்கை
இரஞ்சுகிறவனுக்கு போடும் பிச்சைதான்
காலை என்கிற கருணை
புலம் விசாரிக்க வேண்டாம்
பொருளுணர்ந்து
இருகரம் கொண்டு ஏற்றெடு

சுறுசுறுப்பில் தேனியாகு
நிதானத்தில் ஞானியாகு
அழகான பொழுதை ஆழ்
அன்பால் உலகை வென்று வாழ்.

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (22-Oct-12, 12:54 am)
பார்வை : 182

மேலே