"அது"
ஆறு வினாடிக்கு முன்பு...
அறியவியலாத, "அது" என்னதென்று
அறியத்துடிக்கும் அறிவியல்
யாரறிவர் "அது" யாதென்று
வெளியில்லாத உள்ளும்
உள்ளில்லாத வெளியும்
இயக்கமற்ற இயங்கலும்
உருவமும் அருவமும் அற்ற அவ்வுருவும்
எதுவுமில்லாத எதுவும்
இல்லையிலும் இருந்தியங்கும்
எல்லையில்லா "அது"
அதை நாம் ஆராயத் தரமோ
அண்டத்தை அளக்க இப்
பிண்டத்துக்கென்ன வேலை
பிடித்துக்கொள் அவன் காலை
எல்லாம் பிரம்ம மயம்