வாடகை வீடு .-சிந்தாவின் 'அணில் கூடு'-கவிதைக்காக இது சமர்ப்பணம்

விசாலமானதாய் அறைகள்
மேல்மாடியில் தென்றலின் குசாவல்கள்
சுவரின் நீள்மூலையின் மேலே
அந்தக் குருவியும் என்னோடு
ஊர் ரகசியங்களோடு !

அவ்வப்போது ஓரிரண்டு
வண்ணத்துப்பூச்சிகள்
என் நலம் விசாரித்துப்போகும்
நாங்கள் சிரிப்போம் பலநேரம்

என் பிஞ்சு மகன் தெளித்த
சோற்றுப்பருக்கைகள்
குருவியின் அலகிலும்

அவ்வப்போது அணில் ஒன்று
சன்னலோரம் என் மகளோடு
விடுகதை விட்டு செல்லும்

காகங்களின் மாநாடு
டிவி ஆண்டெனா மீது
மாலைபொழுதில் தீர்மானம் போட்டன-
'நல்ல மனிதர் நல்ல குடும்பம்
நாமிருப்போம் இவர்களோடு
இவ்வீட்டில்'

வீட்டின் உரிமையாளர்
போட்டார் தீர்மானம்
'பார்வையாளர்கள் பலர்
படை படையாய்
வருகின்றனர் நாள்தோறும்
பூட்டி வையுங்கள் வீட்டுக்கதைவை
அல்லாவிடின்
எனவே அதிகம் தர வேண்டும்'

என் வீட்டின் உயிர்நாடிகள்
போட்டன தீர்மானம்
'அடிமையா நாம்
பாருங்கள் வேறு வீடு'
-ஓரிரவில் வேறு வீட்டிற்கு
போனோம்

குருவி,அணில்,வண்ணத்துபூச்சி
காணவில்லை!

அண்ணாந்துப் பார்த்தேன் -
காகங்கள் மாநாடு!
தீர்மானம் என்னவாக இருக்கும்?

அழுகிறேன் நான்.


(சிந்தாவின் 'அணில் கூடு'-கவிதைக்காக இது சமர்ப்பணம் )

எழுதியவர் : புதுவை காயத்திரி (22-Oct-12, 7:42 am)
பார்வை : 135

மேலே