நதியெல்லாம் கடலில் சேரும்...
இரவென்ன பகலென்ன
இரண்டும் ஒன்று...
உறவென்ன பிரிவென்ன
இதயம் ஒன்று...
வலியென்ன சுகமென்ன
கண்ணீர் ஒன்று...
இதில் நீ என்ன... நான் என்ன...
வாழ்க்கை ஒன்று...
மலர்கின்ற மலரெல்லாம்
ஒருநாள் உதிரும்...
திறக்கின்ற இமையெல்லாம்
ஒருநாள் மூடும்....
பிறக்கின்ற நதியெல்லாம்
கடலில் சேரும்...
இதில் நீ என்ன... நான் என்ன....
போடா... போடா...
இதில் ஜெயித்தென்ன தோற்றென்ன
போடா... போடா...
காண்கின்ற கனவெல்லாம்
விழித்தால் போகும்...
வருகின்ற வரவெல்லாம்
செலவாய் ஆகும்...
வழிகின்ற இசையெல்லாம்
மெளனம் ஆகும்....
இதில் நீ என்ன... நான் என்ன...
போடாப் போடா....
இதில் ஜெயித்தென்ன... தோற்றென்ன...
போடா போடா...