மாறாத அன்பு
என் கையில் சிறு காயமெனினும்
சாப்பிடும்போதும் வலிக்கும்
என்றெண்ணி சோறு ஊட்டும்
ஒவ்வொரு நொடியும் என் தாய்
என்னை குழந்தையாக பார்க்கிறாள்.
பலநாள் கழித்து வீடுவந்த எனைக்கண்டு
வாயில் புன்னகையும் - கண்களில்
கண்ணீருடனும் வரவேற்கும் அக்கணம்
பாசத்திற்கு இலக்கணம் வகுக்கும்
தெய்வமாய் காண்கின்றேன் அவளை.
குடும்ப கவலைகளை சொல்லி
ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து
அழுது என் தொழில் சாயும்
ஒவ்வொரு மணித்துளியிலும-நான்
அன்னையினை குழந்தையாக பார்க்கிறேன்.
யாருக்கு யார் குழந்தை
என் அன்னைக்கு நானா - இல்லை
எனக்கு என் அன்னையா?
சேயோ தாயோ - ஆனால்
அழிவிலாமல் அங்கு வாழ்வது
எங்கள் அன்பு மட்டுமே...
கலைத்திடாதே எம் இறைவா
கலைந்திட்டால் கலங்கும் எந்தன் வாழ்க்கை
ஜென்மங்கள் ஏழிலும் சேர்ந்திருந்து
காணவேண்டும் நான் அவளில் உன்னை.
மாறாத அன்பாக என்றும் என்றென்றும்.