கல்யாணமாம் கல்யாணம்

எங்க ஊரு சீதை
சன்னலில் தேடினாள் இராவணனை
எப்போது சிறை எடுக்க வருவான் என்று!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு !
அவன் சொன்னான் ஒரே பொய் "எனக்கு கல்யாணமே
ஆகுல"!.

கணவனுக்கும் மனைவிக்கும் பொருத்தம்
பத்து
மெல்ல மெல்ல குறையும் பொருத்தம் ஒன்று
அடிதடி சண்டையில் !

நேற்று வரை நீ யாரோ ! நான் யாரோ !
இன்று நீ வேறோ ? நான் வேறோ ?
நாளையோ நீ யார் ?நான் யார் ?யார் பெரியவர் ?

கல்யாண சந்தையில் போட்டி
பி .இ .மாடு அது போய் மலையில் கறந்தது
சாராயக்கடையில் !

எழுதியவர் : அ.சவரிமுத்து கவிஞர் (24-Oct-12, 10:20 am)
சேர்த்தது : savarimuthu
பார்வை : 104

மேலே