கற்பை களவாடிய நண்பன்
எனது கற்பை களவாடிய நண்பன்.
மக்கள் நலனை களவாடிய அரசு.
பொழியும் மேக மழைக்காக
பூந்தோட்டங்கள் காத்திருக்க
தாகம் தன்னை தீர்த்திடும்
தண்ணீருக்கு நாம் தவமிருக்க
தண்ணீர் வெண்நீரானால்
இலைதளைகள் செழுத்திடும்மா?
கண்ணீர் செந்நீரானால்
மக்கள் மனம் மகிழ்ந்திடும்மா?
சட்டத்தின் ஓட்டைகளை
சட்டைப்பையில் போட்டுக்கொண்டு
சாதுர்யமாய் தப்பிக்கும்
சதிகார வர்கத்திற்கு
சாட்டையடி கொடுப்பது யார்?
சாவு மணி அடிப்பது யார்?