திருக்குறளும் அரிய தகவல்களும் (திருக்குறள் by திருவள்ளுவர்)
திருக்குறள்:-
பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது.
திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:-
* நாயனார்,
* தேவர்,
* தெய்வப்புலவர்,
* செந்நாப்போதர்,
* பெருநாவலர்,
* பொய்யில் புலவர்
* பொய்யாமொழிப் புலவர்
என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
திருக்குறளும் அரிய தகவல்களும்:-
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒப்.
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.
தமிழ் உரை எழுதியவர்கள்:-
• திரு மு.கருணாநிதி
• திரு மு.வரததாசனார்
• திரு சாலமன் பாப்பையா
• திரு பரிமேலழகர்
• திரு மணக்குடவர்
ஆங்கில உரை எழுதியவர்கள்:-
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
அறத்துப்பால்:-
பாயிரவியல்:
1. கடவுள் வாழ்த்து
2. வான்சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
இல்லறவியல்:
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. புதல்வரைப் பெறுதல்
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவைகூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவு நிலைமை
13. அடக்கமுடைமை
14. ஒழுக்கமுடைமை
15. பிறனில் விழையாமை
16. பொறையுடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினையச்சம்
22. ஒப்புரவறிதல்
23. ஈகை
24. புகழ்
துறவறவியல்:-
25. அருளுடைமை
26. புலான்மறுத்தல்
27. தவம்
28. கூடாவொழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னாசெய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய்யுணர்தல்
37. அவாவறுத்தல்
ஊழியல்:-
38. ஊழ்
பொருட்பால்:-
அரசியல்:-
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றங்கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினஞ்சேராமை
47. தெரிந்துசெயல்வகை
48. வலியறிதல்
49. காலமறிதல்
50. இடனறிதல்
51. தெரிந்துதௌiதல்
52. தெரிந்துவினையாடல்
53. சுற்றந்தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்தசெய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கமுடைமை
61. மடியின்மை
62. ஆள்வினையுடைமை
63. இடுக்கண் அழியாமை
அமைச்சியல்:-
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினைசெயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்தொழுதல்
71. குறிப்பறிதல்
72. அவையறிதல்
73. அவையஞ்சாமை
அங்கவியல்:-
74. நாடு
75. அரண்
76. பொருள்செயல்வகை
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பு
80. நட்பாராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடாநட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகைமாட்சி
88. பகைத்திறந்தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச்சேறல்
92. வரைவின்மகளiர்
93. கள்ளுண்ணாமை
94. சூது
95. மருந்து
ஒழிபியல்:-
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில்செல்வம்
102. நாணுடைமை
103. குடிசெயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை
காமத்துப்பால்:-
களவியல்:-
109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சிமகிழ்தல்
112. நலம்புனைந்துரைத்தல்
113. காதற்சிறப்புரைத்தல்
114. நாணுத்துறவுரைத்தல்
115. அலரறிவுறுத்தல்
கற்பியல்:-
116. பிரிவாற்றாமை
117. படர்மெலிந்திரங்கல்
118. கண்விதுப்பழிதல்
119. பசப்பறுபருவரல்
120. தனிப்படர்மிகுதி
121. நினைந்தவர்புலம்பல்
122. கனவுநிலையுரைத்தல்
123. பொழுதுகண்டிரங்கல்
124. உறுப்புநலனழிதல்
125. நெஞ்சொடுகிளத்தல்
126. நிறையழிதல்
127. அவர்வயின்விதும்பல்
128. குறிப்பறிவுறுத்தல்
129. புணர்ச்சிவிதும்பல்
130. நெஞ்சொடுபுலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடலுவகை .
7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது திருக்குறள்.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம்.
தமிழ்நாடு - இந்தியா.