விடைகள் கிடைத்தும் மறையா கேள்விகள் ..! -1
எழுதுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அனால் ஏனோ தெரியவில்லை..இதை எழுதுவதற்கு அல்ல ஆரம்பிப்பதற்கு என்னக்கு இவ்வளவு காலம ஆனது. காரணம் சாதரணமாக மனிதர்களிடம் உள்ள வியாதிதான் ..... சோம்பேறித்தனம்..! சரி .. எப்படியோ ஆரம்பித்துவிட்டேன். இதோ என் எண்ணங்களின் எழுத்துவடிவம். இதை நான் எழுதுவதால் நான் ஞானி அல்ல .. வெறும் என் அனுபவங்களையும் , நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் சாதாரண பெண் தான்.
வாழ்கை. நான் கண்ட வரை... இது ஒரு சுவாரசியமான புத்தகம். இதை நான் சொவதற்கு ஒரு காரணம் உண்டு. நான் ஒரு பழமொழியை கேட்டுள்ளேன். அது "புத்தகம் மனிதனுக்கு உண்மையான நண்பன் " என்பதே அது. அதில் பலவரற்றை கற்றுக்கொள்ளலாம். வாழ்கையும் அது போல்தான். வாழும் ஒவ்வோரூ நாளையும் நான், வாழ்கை புத்தகத்தின் பக்கங்களாக கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் அதில் ஒன்று நான் கற்று கொண்டு இருகிறேன்.இதை நீங்கள் படிக்கபடிக்க இதிலென்ன இருக்கிறது என தோணலாம்.....அனால் எதில் நான் கண்ட ... வாழ்கையின் பல உண்மைகள் உள்ளன..
வாழ்கை என்பது என்ன ? வாழ்க்கையில் நிறைந்தது என்ன ? நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம்?
வாழ்கையில் பலருக்கும் பல கனவுகள் உண்டு. அந்த கனவுகளை நோக்கி ? துரத்தி செல்கின்றோம் . அதை அடைந்தபின் ....... உண்மை என்ன என்றல் வாழ்கை என்பது வெறும் எந்த கனவுகளுடன் முடிவதல்ல . நாம் அனைவரும் வெறும் சிறு வட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .எந்த கனவுகளையெல்லாம் தாண்டி வாழ்கை மிக பெரியது.
ஏனோ அதை பலர் உணர மறுக்கின்றனர்.
வாழ்கை என்பது ...இன்பம் .சுகம்,,மகிழ்ச்சி. துன்பம், வெறுப்பு, செல்வம், துரோகம், வெறுப்பு,வன்மம், அன்பு, காதல், வெறி, சூழ்ச்சி, ஆச்சரியம், வியப்பு, பயம், நெருடல், நன்றி, பழியுணர்வு, கூபம், கனவுகள், தாகம்,செல்வம்,வறுமை, செழிப்பு, பெருந்தன்மை, சுயநலம், பொதுநலம், வெற்றி, , தோல்வி, உறவுகள், நல்ல செயல்கள், தீய செயல்கள் வறட்சி ,அமைதி, கேளிக்கை , கொண்டாட்டம், திண்டாட்டம், அலைபாயும் மனம் , பணம், பொய், என பலவற்றை உள்ளடகியாதே.
மேலே எழுதப்பட்டவை மட்டுமல்ல என்னும் எண்ணிலடங்காதவை உள்ளன , மனித வாழ்வில். அனால் நம் மனித இனம் மட்டும் இவற்றை நினைப்பதே இல்லை.
சந்திப்போம்.....
(மோகனா ராஜராஜெந்திரன் )