விடைகள் கிடைத்தும் மறையா கேள்விகள் ! - 2

நான் கண்டவரையில் நம் மனித இனம், இக்காலக்கட்டத்தில் வெறும் பணம் ஒன்றையே குறிக்கோள்ளாக எண்ணி ஓடிக்கொண்டு இருக்கிறோம்....... இருக்கிறார்கள். பணத்தை தேடி வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிரர்கள்.

"பணம் மட்டுமே பலரின் வாழ்க்கை எல்லை..
அதே,
பணம் இல்லாமல் பலருக்கு வாழ்க்கையே இல்லை "

-மோகனா ராஜராஜெந்திரன்.


எடுத்த எடுப்பிலே பணம் பற்றி எழுத எனக்கே சலிப்பு வந்து விடுகிறது. என்ன செய்வது, என்ன தலைப்பெடுத்து எழுதினாலும் கைசியில் வந்து நிற்பது எந்த அற்ப பணம் தானே....

நான் வெறும் அலட்சியத்தில் பேசவில்லை. பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமான ஒன்று....("நேர்வழியில்").! என்பது எனக்கும் தெரியும். அது வெறும் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்யவே அன்றி வாழ்க்கையையே போஊர்தி செய்ய அல்ல,

அக்காலத்திலும் சரி , இக்காலத்திலும் சரி ,பணம் நம் மனித இனத்தை பலவாறு ஆட்டிப்படைக்கிறது.

இது நான் கண்ட உண்மைகளில் ஒன்று.
" பணமும், பணத்தின் மேல் நம் மனித இனம் கொண்டுள்ள மோகமும் , வெறியும் நம்மை பண்ப்பட்ட மனிதர்களாக மாற விடுவதில்லை "

எந்த ஒரு பொருளுக்கும் சரி, செயல்லுக்கும் சரி...இரு பக்கங்கள் உண்டு.ஒன்று நல்லது மற்றொன்று கெட்டது.



மற்றவை அடுத்த சந்திப்பில்.....!

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (28-Oct-12, 11:55 am)
பார்வை : 181

மேலே