மழை காலத்தில் என் நினைவு........

அழகாய் பெய்தது மழை...
பூமி பற்றிய பிரம்மாவின்
அழகிய கவிதை.....
வாசித்து கொண்டே
சற்றே கவனித்தேன்....

சின்ன சின்ன குடுவைகளில்
மழை நீரை சிறை பிடிக்கும்
அம்மா.....

சேறாக்கி வாசலில் கட்டி
நிற்பதால் சிறை விடுக்கும்
அப்பா.....

கப்பல் செய்து மூழ்காமல்
துடுப்பு போடும் என்
செல்ல மகள்....

மழையில் ஒரு முறை
நனைந்து கொள்கிறேன்
என அடம் பிடிக்கும்
என் அருமை மகன் ....

மழையில் இழுத்து போர்த்தி
உறங்கும் என் சின்ன
நாத்தனார்.....

என் பரிதவிப்பெல்லாம்
சற்று முன் என் ஜன்னலோரம்
வந்து போன அந்த குருவிக்கு
அடைக்கலமாய்

வெட்டலுக்கு
தப்பிய ஒரு மரமாவது
கிடைத்து விட
வேண்டுமென்பதுதான் ...........

எழுதியவர் : இன்போ.ambiga (24-Oct-12, 1:32 pm)
பார்வை : 1160

மேலே