வெற்றிடம்

பிரபஞ்சத்தினளவு பெருத்துக்கிடந்த
கனவின் இருப்பிடத்தில்
என் காத்திருப்பு சாத்தியமில்லை

இன்னும் எல்லைகளை விரிவுபடுத்த
எத்தனிக்கும் கற்பனை மையத்தில்
என் நிதானம் உறுதியில்லை

அலைகளாய் கன்னத்திலடிக்கும்
மன ஆர்ப்பரிப்புகளில் லயிக்கும்
ஆசைகள் கரை தாண்டுவதாயில்லை

உன் மௌனத்தால் வளரும்
இயலாமையும் கோபமும் என்னை
சிறு புள்ளியாக்கிட
நீ கவனிப்பதாயில்லை

உன் தாமதங்கள்
என்னை தேய்க்கையிலும்
நினைவுகளின் தாக்கம்தான்
காக்கிறது
நீயற்ற காதல் உயிரை !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி. (25-Oct-12, 6:02 pm)
பார்வை : 164

மேலே