நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்....
அமைதியான இரவில்,
அண்ணாந்து பார்த்தேன்.....
அனைத்தினும் பெரிய
அந்த ஆகாயத்தில்
ஆயிரம் ஓட்டைகள் ?
ஆம்ஸ்ட்ராங் அளந்த
பாத சுவடுகள் ?
நிலா தோட்டத்தின்
மதுரை மல்லிகள் ?
தேவதை சிந்தி
தெளித்த வர்ணங்கள் ?
ஏழைகளின் நிறைவேறா
ஆசைகளின் கணக்கு ?
தமிழக மின் தேவைக்கு
தரப்பட்ட
மின்மினிகள் ?
அரசியல் கண்ட வானம்
அழுத கண்ணீர் ?
இமயம் எறிந்த
இந்திய பனித்துளி ?
காலை கோலத்திற்கு
இரவிலேயே இடப்பட்ட புள்ளிகள்?
இரவில் மட்டும் சிமிட்டும்
கனவு தேவதைகள் ?
அவ்வை பாட்டி ஏற்றிய
அணையா சிமிழிகள் ?
இறக்கை இல்லா
அவதாரங்கள் ?
மேனகையின் அறுந்த
முத்து மாலை ?
ஓ......
சந்தேகமில்லாமல் இது
அவளின் சிரிப்பு!!!! ......
அன்புடன் சரவணன்