ஒரு கவிதையைப் பற்றியதாகவே....

ஒரு கவிதையைப் பற்றியதாகவே
இருக்கக் கூடும்....

வண்ணத்துப் பூச்சியின் காலடித் தடம்
பதிந்த பூவிதழின் முறுவல்கள்...

காற்றின் சிறு முத்தங்கள் பதிந்த
உதிர்ந்த சிறகுகள்....

நக்ஷத்திரங்களின் ஒளி உமிழும்
வெண்ணிலவுப் பாதை...

கடல் திரும்பிச் செல்லும் அலை
ஒளித்துப் புரளும் குழந்தைகளின் சிரிப்பு...

அம்மாவின் முதிர் சுருக்கங்களில்
புரண்டு திரும்பும் பழைய ஞாபகங்கள்...

எல்லாமும்....

யாரும் எழுத முடியாத
ஒரு கவிதையைப் பற்றியதாகவே இருக்கலாம்.

எழுதியவர் : rameshalam (26-Oct-12, 3:07 pm)
பார்வை : 162

மேலே