மழைமுகம்

கார்முகிலில் தன் கண்ணை ஆதவன்
காட்டாமல் மறைத்தபொழுது
வின்னிழையாய் விழுந்துகொண்டிருந்தது
மண்ணில் மழை

வனங்களில் நனைகின்றது மரம் - வானவில்லின்
வண்ணங்களில் கரைகின்றது மனம்
குருவிக்கும் சிறு குடைபிடிக்க எண்ணம் தோன்றும்
குறியால் சிறகு சிலிர்த்து வேண்டாமென்றது கூறும்

மண் வாசம் வீசுகின்றது
மழைக்காற்று உயிரை கூசுகின்றது
நின்றுபோன மழைநீரெல்லாம் துளியாய்
நின்று மலர்களோடு பேசி சிரிக்கின்றன

ஆதவனின் இடப்பெயர்சிக்குப்பின்னால்
ஆகாயத்தில் சிந்தனைப்பதிப்பு
அது என்ன சுவர்க ரேகையோ
அல்லது வெற்றுக்கீரலோ , ஓ .. மின்னல் !

கண் முன் சென்ற காட்சிகளெல்லாம் மறைந்துபோனது
தன் மகிழ்வும் முகத்தில் மறித்துபோனது
மழை பொய்த்தபொழுது

எழுதியவர் : அருள்ராஜா ராமன் (26-Oct-12, 8:51 pm)
பார்வை : 144

மேலே