பலூன்

அன்று விடுமுறைதினம்
கடற்கரையில்
பலூன் வியாபாரி
தனிமையில்அமர்ந்திருந்தார்
அருகே வந்தச்சிறுமி
அழகாய் பலூன்
ஒன்று கேட்க,
முதியவர் ஊதி..கொடுத்தும்
சிறிது தூரத்தில்
ஏதோப் பட்டு “டப்பென”
வெடித்துக் கிழிந்தது
,சிறுமி கை பலூன்,
சிறுமியின் அழுகை
அப்பா வரை நீண்டது,
அப்பாவும் முதியவர்
கடை வந்துச்சேர்ந்தார்.
முதியவர்,
சிறுமி தலை கோதி
உடையாத பலூன்
வேண்டுமா?உடையிர
பலூன் வேண்டுமா?எனக்கேட்க
குழந்தை
உடையாத பலூன்
எனச், சொல்லியும்,
அப்பா,அந்த ஐந்து
ருபாய் பலூனே
போதுமென்றார்!
கையில் பலூநெடுத்து,
முதியவர் மூச்சிழுத்து
முகப்பின் முனை வைத்து
முடிந்தவரை மூச்சைத் தள்ள,
பட்டென்று உடைந்தது
மீண்டும் பலூன்,
சிறுமி பிடித்த அடத்தின்
நிமித்தமாய் அப்பா
அழாதக் குறையாய்,
பெரியவரை பார்த்து,
இதெல்லாம் கொஞ்சம்
அதிகமென, பெருமித்தள்ள,
“பெரியவர்,ஐயா
நான் ஊதும் பலூனைவிட
குழந்தைகள் உடைக்கும்
பலூன் தான் எனக்கு
ஒரு வாய்க்கஞ்சி”என்று
வெய்யிலில் நடைக்கட்ட..
வியாபாரமா,விவேகமா?
தொழில் யுக்தியோ
விதியின் புத்தியோ
என ஏதும் தெரியாமல்
விக்கித்து நின்றார்,
குழந்தையின் அப்பா,