உனக்காகவே....

உனக்காகவே....

மழைச் சாரலில்
மாலை வீதியினில்
மகிழ்ச்சியில் நனைகிறேன்

இருவிழி இமைச் சாரலில்
இதய வீதியினில்
நித்தம் நீராடுகிறேன்

நின் நினைவுகளின் சாரலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பூக்கிறேன்
உனக்காகவே
கவிதையாக...

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-12, 10:16 am)
Tanglish : unakaakave
பார்வை : 217

மேலே