அம்மா

அன்பின் அடையாளமாய் இருந்தவளே அம்மா...!
உனக்கு ஒரு கடிதம்.

கருவில் இருந்தவரை கண்டதில்லை - பசி
பஞ்சம், போட்டி, பொறாமை, வன்முறை...
அனைத்தையும் ஏற்று கொண்டு
அன்பை மட்டும் ஊட்டி வளர்த்தாயே...!

இன்று
வந்துவிட்டேன் கருவறையை விட்டு - காணுகிறேன்
பசி, பஞ்சம், போட்டி, பொறாமையை
கருவறையில் கண்ட உலகம் இங்கில்லையே அம்மா
மீண்டும் வருகிறேன் கருவறைக்கு
ஏற்று கொள்கிறாயா...!

கருவறையில் சுமந்தவளின் கனவை நனவாக்க
வந்தோம் - ஆனால் இன்று
உருகுகிறோம் உலக நடைமுறையால்
உடலின் பாதியை உருக்கி உருவம் தந்து
உயிர் தந்த தாயே - இன்று
உண்ண உணவும் இருக்க இடமும்
இல்லாமல்
இருக்கிறோமே...!
நான் சுமக்கிறேன் உன்னை
வா அம்மா என் கருவறைக்கு...
வருவாயா அம்மா...!

- கார்த்திகேயன் . V

எழுதியவர் : கார்த்திகேயன்.V (30-Oct-12, 10:01 am)
Tanglish : amma
பார்வை : 232

மேலே