குருவின் மூன்று நிலைகள்
அறிவை போதித்தார் ஆசிரியர்
ஆன்மீகத்தை போதித்தார் குரு
ஆன்மாவை போதித்தது என் மனம்
அதிசயித்து தவம் இருந்தேன்.....
அப்போது " நான் " தொலைந்து போனேன்...
மரக்கட்டைகளில் உயிர் கண்டேன்
மண்ணிலே மகிழ்வு கண்டேன்
என்னிலே இறைவன் கண்டேன்
எங்குமே இன்பம் கண்டேன்