அன்பே உனக்காக!
கண்ணிமைக்காமல் கண்டிடவே
பிள்ளை மனம் ஏங்குதம்மா...
அருகில் இருக்கும்போது
அருமையது உணரமறந்தேன்...!
மறந்தேனா? இல்லை, மறைத்தேனா?
இருக்குபோது உணராததை,
பிரிந்தபோது தேடுவதுதான்
வாழ்க்கையா???
புரியவில்லை அன்பே...!
எத்தனைமுறை இருந்திருப்பேன்
உன்னருகில்...
இருந்தாலும் ஏக்கம் மட்டும்
இன்னும் தீரவில்லையே!
ஏனம்மா???
அழகை ரசிக்கவைத்த அழகியே!
அன்பால் ஆட்கொண்ட அன்னையே!
உன்னருகில்
நானிருந்த ஒவ்வொரு நொடியும்
மறையும்வரை மறையாதம்மா...!
மறக்க நினைத்தாலும்
முடியாதம்மா...!
எப்படி இருப்பினும்
ஏற்றுக்கொள்கிறாய்...!
உன்னைப்போல் யாரிங்கே?
தேடுதலுக்கு விடையில்லை...
நான் இன்று தேடுகிறேன்
உன்னைப்போல்
எனக்கொரு துணையை
என்னைக் காதலிக்கவும்
உன்னை நேசிக்கவும்...