இன்றைய அரசியல் .........

மூலதனம் இல்லா வியாபாரம்
சாதிமதம் அடிப்படை தகுதி
கல்வியறிவு கட்டாயம் இல்லை
ஆயுதமுள்ள ஆள்பலம் அவசியம்
ஆள்சேர்க்கும் திறமை முக்கியம்
மனசாட்சி இல்லா மனங்கள்
பொய்சாட்சி சொல்லும் பக்குவம்
சுயநலம் உள்ளவர்க்கே சுதந்திரம்
இருமனம் படைத்த இதயங்கள்
சொன்னதை மறந்திடும் வல்லமை
உழைக்க இயலா உள்ளங்கள்
மக்களை மறக்கச் செய்திடும் மந்திரம்

எழுதியவர் : பழனி குமார் (31-Oct-12, 7:55 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : indraiya arasiyal
பார்வை : 1321

மேலே