பெண்கள்

எனக்கு உயிர் கொடுத்த தாயின் பாதத்தில் என்
நெற்றிப் பொட்டை வைத்து என் காற்றினை துவங்குகிறேன் !

என்னை உன்னுள் வைத்து பத்துத் திங்களை முறியடித்து
மூச்சினையும் உணர்வினையும்
அள்ளி விதைத்து
முதலாக என் இதயத்தை முளைக்க வைத்தவள்!

அமைதி இழந்த மனதில்
அமைதிப் புயலை வீசி விட்டு செல்ல
தேவை தான் இந்த
பெண் ஆகிய தோழிகள் !

மழை வழங்கும் மேகம் தான் பெண்கள்
தன்னை இழந்து
பிறரை வாழ வைக்கும்
அரைகுறை பாக்கியசாலிகள் !

நிலவின் வடிவம் மாறுகிறதே தவிர
நிலவின் குணம் மாறுவதில்லை போல
பெண் மட்டும் தான் மாறும்
பெண்ணின் உயரிய குணம் மாறுவதில்லை !

தன்னை தாழ்த்தி கூறுபவனே
வாழ்வில் தலைத் தொங்குவான் என்று
அறியாத ஒரு பாலினம் தான் இந்த பெண்கள் !

இயற்கை அன்னையே விட்டு பிரிய மனமின்றி
பெண்களின் வர்ணிக்க விழைந்தால் என்னின்
மழலைகளை வைத்தே வர்ணித்து கொள் என்று
கட்டளை விதித்துள்ளது!

தனி சிறையில் சிக்கி பல திங்களில் சில திங்களில் மட்டுமே உணவு அருந்தி
பின்னர் வெளியேறி மூன்று வேளை
நான்கு நாள் கழிய மனிதன் ஒருவன்
நிறை குடம் தழும்ப தேன்னைக்
கண்டது போலத்தான் இருக்கும்
உண்மைப் பெண்களை கண்டவுடன் !

மழலைப் பேசும் மங்கை மனமும் ஒன்று
புரிந்து கொண்டால் மட்டுமே
அன்பு நிலைக்கும் !

ஆணின் காதலும் பெண்ணின் காதலும்
அன்பைக் கடந்த பின்பே தோன்றும் !
உண்மை அன்பின் இலக்கணமாக
என் உண்மை தோழி சித்திரம் !

எழுதியவர் : வேல்முருகனந்தன்.சி (1-Nov-12, 2:11 pm)
Tanglish : pengal
பார்வை : 208

மேலே