விட்டுவிடாதே என்னை

என்னைத் தயவு செய்து
அனைத்து முத்தமிட்டுத்
தீண்டிவிடு!

வசந்தம் தீண்டாத மரத்தை
பட்டுவிட்டதென்று
வெட்டி விடுவதுபோல்

நீ தொட்டுத் தழுவாத தேகத்தை
பிணமென்று எண்ணிப்
புதைத்துவிடப் போகிறார்கள்.......

எழுதியவர் : தேவி (2-Nov-12, 3:32 pm)
பார்வை : 144

மேலே