குருதி படர்ந்த காலடித் தடம் !
வரும்போது
உலகம் எனக்கு தூரமாய்,
போகும்போது
உலகமே எனக்கு பாரமாய்,
இதயத்துள் குதிப்பதும்
இரத்தத்தில் குளிப்பதும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
எழுந்து போவதும்
காதலின் வாடிக்கை !
குருதி படர்ந்த காலடித் தடங்களை - தடவிப்
பார்த்தபடி தவித்துக் கிடக்கிறேன் நான் !