வாழ்வியற் குறட்டாழிசை 2 இறை சிந்தனை

வாழ்வியற் குறட்டாழிசை.

2. இறை சிந்தனை.

அமைதியான இடத்தில் அமர்ந்து இறைவன்
அருகே செல்ல முயல்.

ஆண்டவன் சந்நிதியின் அமைதி ஒருவன்
மீண்டெழுந்திடும் மனவியல் வழி.

தெய்வ வழிபாடின்றேல் உலகில் மனிதன்
உய்வது, உயர்வது எங்ஙனம்!

துர்க்குணங்களை அழிக்க இறை சிந்தனை
துப்பாக்கியாகும், வாழ்வு ஒளிரும்.

குறைகளை மானசீகமாக இறையிடம் கொட்டு
கறைகள் காணாமற் போகும்.

இரவும் பகலும் இறையை நினை.
வரமாகும் நிறை நிம்மதி.

நெஞ்சுரம், நீதி, இறை சிந்தனையால்
வஞ்சமில்லா வாழ்வு பெறலாம்.

பஞ்சமா பாதகங்களை இறை சிந்தனை
அஞ்சி ஓடச் செய்யும்.

ஆதவன் கண்ட பனி நீர் தான்
மாதவன் நினைவில் துன்பம்.

தும்பிக்கையானைத் துதித்தால் தினமும் நம்பிக்கை
நல்ல எண்ணம் பெருகும்.



வரிகள் ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-3-2011.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (6-Nov-12, 11:35 pm)
பார்வை : 136

மேலே