துளிர்கள்

மண்ணில் உலவிடும் கவின்மிகு மலர்கள்
பண்ணிசைப்பது போலும் கதைத்திடும் தளிர்கள்
விண்ணையும் துருவி ஆராயும் கண்கள்
எண்ணத்தால் தெய்வமாய் இலங்கிடும் குழந்தைகள்

கடமை உணர்ந்து கருத்துடன் அவர் வாழ
உடல்நலம் தந்திடும் யோகாவைக்கற்பிப்போம்
மடமை நீக்கிட நூல்களைப் படிப்பிப்போம்
திடமனம் தந்திடும் தியானமும் பயில்விப்போம்

வாழ்வின் நெறிகள் உணர்ந்து வாழட்டும்
தாழ்விலும் ஒழுக்கம் தவறாது ஓம்பட்டும்
கூழானாலும் அன்புடன் பகிர்ந்து உண்ணட்டும்
வீழினும் ஊக்கத்துடன் மீண்டு எழட்டும்

கூர்அறிவால் புதியன அவர் படைப்பார்
சீர்தூக்கி பழையன காத்திடுவார்
பார் ஏத்த பாரதத்தை உயர்த்திடுவார்
போர் இல்லா உலகத்தை உருவாக்கிடுவார்

எழுதியவர் : (6-Nov-12, 8:50 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 172

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே