!!!காதல் என்னைக்கரைச் சேர்த்தது !!!
அமைதியைக் காதலித்தேன் அதென்னை
அன்பாய் அனுதினம் ஆராதிக்கிறது (...)
உண்மையைக் காதலித்தேன் அதென்னை
ஊழியில் உரவாய் இயங்கச்செய்கிறது.
கடமையைக் காதலித்தேன் அதென்னை
கட்டுப்பாட்டுக்குள் கண்ணியமாய் காக்கிறது(...)
தர்மத்தைக் காதலித்தேன் அதென்னை தலைக்கனமில்லா தளிராய் தழைக்கச்செய்கிறது
நீதியைக் காதலித்தேன் அதென்னை
நியாயமாய் நேர்மையோடு நித்தமணைக்கிறது(...)
பணிவைக் காதலித்தேன் அதென்னை
பாசமாய் பண்போடு பாதுகாக்கிறது (...)
கறைபடாமல் காதலித்தேன் ஆகையால்
அலையடிக்காமல் கரை சேர்ந்தேன் .....
.