புறா மூலம் வந்த ட்வீட்கள்!

அங்கும் இங்கும் தேடி அழைந்து
அந்தப் புறா கண்டுகொண்டது
அரசரின் படுக்கை அறையை.

அதிகாலையில் விழித்து
படுக்கையில் அமர்ந்திருந்த
அரசர் மடியில் விழுந்தது புறா
‘கீச் கீச்’ என்று அலறியபடி....

அதன் கால்களில் கட்டியிருந்த
காகிதத்தை எடுத்தார் அரசர்
அதில் ‘நச் நச்’ என்று
140 வார்த்தைகளில் இருந்த
கடிதத்தை படித்ததும்
நறுக்கென்று வலித்தது அவருக்கு.

“அரசரே! அரண்மனைகளில் உள்ள
அனைத்து கழிவறைகளிலும்
வெடிகுண்டு வைத்துள்ளதால்
இனி நீர் ஆய் போக முடியாது”

மிரட்டல் ட்வீட்டைக் கண்டதும்
மிரண்டுபோன அரசருக்கு
அடக்கமுடியாமல் அவஸ்த்தைப்பட்டார்

அரண்மனைக்கு வெளியே உள்ள
பொதுக் கழிவறைத் தேடி ஓடினார்.
அங்கிருந்த அசுத்ததில் அவருக்கு
எதுவும் வரவில்லை

நொந்துபோய்
அரண்மனை திரும்பிய அரசருக்கு
அடுத்து வந்தது புறா மூலம்
இன்னொரு கீச்-
“அரசரே! உமது சின்ன வீட்டு ரகசியங்களை
விரைவில் வெளி உலக்குக்கு கீச்சப்படும்”

அவசரமாக
அரசவையைக் கூட்டி
ஆணையிட்டார் அரசர்....

“நாட்டில் இனி யாரும்
புறா வளர்க்க கூடாது.
இருக்கும் புறாக்களையும் உடனே
பொரியல் செய்துவிட வேண்டும்”

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (7-Nov-12, 1:25 pm)
பார்வை : 172

மேலே