வாழ்க்கை கணிதம்
வாழ்க்கை ஒரு கணிதம்!
இதில்
தேவைகளை கூட்டினால்
முயற்சிகள் தானே பெருகும்!
முயற்சிகளை கூட்டினால்
அனுபவங்கள் தானே பெருகும்!
தெளிவான பாதையை
வகுத்து விட்டால்
வேண்டாதவை தானே கழிகின்றன!
கற்க வேண்டியவை மட்டும்
வாழ்க்கையில் அதிகம்!
பிறரின் முயற்சியை
கடன் வாங்கி
தனது உறக்கத்தை கழிப்பதும்
சமுதாய பரபரப்புகளை
சாதகமாக்கும்
தசம ஸ்தானங்களும்
கற்று விட்டால்
வாழ்க்கை கணிதத்திற்கு
விடை தானே கிடைத்து விடும்!