அமைதி தீபம்
பிரிந்திட்ட சொந்தங்கள் கூடி
பேரன்பு வார்த்தைகள் பேசி
சிரிக்கின்ற இன்பங்கள் தோன்றி
சிந்திட்ட கண்ணீரை மாற்றி
விரிக்கின்ற ஆனந்தச் சிறகால்
விண்மீது பறந்தந்த நிலவில்
எரிகின்ற தீபத்தை வாங்கி
ஏற்றட்டும் இங்கமைதி தீபம் !
தீபமேற்றும் அனைவருக்கும் என்
தீபாவளி வாழ்த்துக்கள்.