வெப்பச் சலனம்

களைக் கட்டியிருந்தது
தீபாவளி வியாபாரம்!
பேருந்து நிறுத்தத்தில் இருந்து..
இறங்கியதும்..
வேகமாய்...விருப்பமாய்..
அவரவர்த்..தேவைக்கு..அவரவர் விரும்பும்
கடைத் தேடி..
கொள்முதல் முடித்து..
குஷியாய் வரும் கூட்டத்தோடு..
இடித்து ..ஏறிட்டு பார்த்து..
எதிரும்..புதிருமாய்...
பிதுக்கி...பிதுங்கி..
மழை...நேரத்து..குளிரையும்..
மனித நெருக்கத்தால்..
அந்த பஜாரை..உஷ்ண பிரதேசமாக்கி..
ஊருக்குள் மின் வெட்டு..
இங்கே இல்லையென
வெளிச்சங்கள் விதைக்கப்பட்டு .
தேடிய புடவை கிடைத்த
சந்தோசத்தை..தோழிகளுடன் சிலாகித்து..
செல்லும் பெண்மணிகள்..!
உள்ளத்தின் பொருமல்களுடன்
..உறவுகளாய் உதடுகள் உறவாடிச் செல்லும்
ஓரகத்து பெண்கள்..!
இடித்துச்செல்லும்
வருத்தமில்லா வாலிபச் சங்கங்கள்..
கேட்டதை வாங்கித் தராததால்
அழுது அடம்பிடிக்கும் செல்லக் குழந்தைகள் !
தலைத் தீபாவளி கொண்டாட வந்திருக்கும்
புது மணமக்கள்..
இப்படி..
எல்லாத் தரப்போடும்
இறைந்து கிடந்தது
அந்த தீபாவளி பஜார்!
நாளை கொண்டாடும் தீபாவளியின் போது
அழுது..அடம்பிடித்த குழந்தைகள்..
புதுத் துணிகளிலும்..புது பட்டாசுகளிலும்..
நேற்றைய அழுகையை தொலைத்து.
இன்றைய புன்னகைப் பூக்களை பூக்கச் செயும் !
நேற்றைய ஆர்வத்தை தொலைத்துவிட்டு..
பெருசுகள்மட்டும் நாளை வழிமறிக்கும்
கடன்கள்..வாழ்வின் எதிர்காலச் சுமைகள் என
கரிந்து போன பட்டசுகளாய் வலி சுமக்கும்