உருவாகும் உறவுகள் ....

பூமியில் பிறந்தவுடன்
தாய் தந்தை உறவு
உடன் பிறந்தோரால்
சகோதர சகோதரி உறவு
பெற்றோர் வழியில்
அத்தை மாமன் உறவு
பள்ளி கல்லூரியில்
நண்பர்கள் உறவு
திருமண நிகழ்வால்
கணவன் மனைவி உறவு
பிள்ளைகள் இருந்தால்
மகன் மகள் உறவு
அவர்களின் திருமணத்தால்
மருமகன் மருமகள் உறவு
பிள்ளைகளின் பிள்ளைகளால்
பேரன் பேத்தி உறவு
ஆயிரம் உறவுகள் அகிலத்தில்
பாயிரம் பாடினாலும் பாரினில்
உருவாகும் உறவுகளைவிட
உயிரோடு கலந்திட்ட
உயிராக உள்ளவரை தங்கிடும்
உயர்ந்த உறவு என்றுமே
உள்ளம் என்ற மனசாட்சிதான் !

பழனிகுமார்

எழுதியவர் : பழனிகுமார் (11-Nov-12, 8:02 am)
பார்வை : 180

மேலே