முகவரி தேவை இல்லை
என் வேதனைகளின் சகியாமைகளை
சந்தொசங்கலாக்கி புசித்திருக்கும்
உன் மனதின் பசியாறும்போது
என் மரணத்தின் ருசியறிவாய் .
என் கல்லறைகளின் மேல்
முற்களைப் போட்டு வைத்தாலும்
காதலாய் வேர்விட்டு
என் மனம்போல்
பூக்களாய் மலருமென்பது
சருகுகளிலான உன்
உருகாமைகளுக்கு புரியாது.
நம் தேசத்தில்
கடல் நீரின் மட்டம்
உயர்வை பற்றி சொல்லும் விஞ்ஞானம்
உன் போன்றவர்களால்
பெருக்கெடுத்து வற்றிப் போன
கண்கள்தான் அதன்
காரணமென்று சொல்லாதது புதுமை
வாழ்க்கை நரகத்தில் உழன்று
தவிப்பதற்குப் பதிலாய்
மரணத்தின் வாயிலாய்
சொர்க்கத்தை அடையலாம் என்னும்
பாடத்தை கற்றுத்தரும்
கண்கள் என்பது காசினியின்
காளையர்களுக்கு
மானசீக வாத்தியாரா தெரியவில்லை.,
எதோ சொர்க்கமென்று ஒன்று
உள்ளதெனில் இறைவனிடம் சொல்வேன்
அதன் முகவரி எதுவானாலும்
அங்கெ உன்போல் காதகிகளின்
முகவரி இல்லாமல் இருக்கட்டும் என்று