எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-14
தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் பதினான்காம் படைப்பு...
தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்.....
இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..
வாசித்து தோழர் ரதி பிரபாவிற்கு வாழ்த்துகள் கூறலாம்..
குழந்தையின் கேள்வி
நிலாச் சோறு ஊட்டி நின்னே
நிலான்னா என்னான்னா கேட்டேன்,
வானத்து ராசாவின் ராஜகுமாரின்னு
ஆசையா எடுத்துச் சொன்னே .
மின்னிக்கிடக்கும் நட்சத்திரங்களை
விதைச்சது யாருன்னு கேட்டேன்,
ஆண்டவன் இரவுக்குப் போட்ட
அணையா விளக்குன்னு சொன்னே .
அதுக்கு யாரு எண்ணெய் ஊத்துவாங்கண்ணு
இன்பமாக் குடைஞ்சுக்கேட்டேன் .
வானத்துமேகம் ஊத்திக் கொட்டுற
மழையில உறிஞ்சி எரியிதுன்னு சொன்னே .
வானத்து ஒசரம் என்னம்மானா
கேட்டா ஏம்மா அடிக்கவர்ற.
தெரியலன்னா புரியலன்ன ஏனம்மா
கடவுள்கிட்ட கேக்கல.
அவருக்குந் தெரியாதா ?