நான்கெழுத்தில் நண்பன் பெயர்!

நண்பன் நான்கு எழுத்து,
என்நண்பன் அவன் பெயரும்
அதே நான்கெழுத்து!!

தொட்டாலும் கவி சொல்வான்,
விட்டாலும் கவி சொல்வான்,
வேண்டாம் என்றால்
நான்குவரியில் நச்சென்று
பழமொழியும் சொல்லுவான்!!!

அவனுக்கு பிடித்த பெண்ணுக்காய்
தினமும் முகச்சவரம் செய்தவன்,
அதேகன்னத்தில் தாடிவைத்து
அதை கூர்லீன்களின்
முகவரியாய் மாற்றிவிட்டான்!!

உணர்வின்றி உயர்வுபெற,
உயிர்பிரிந்து,
செங்கடல்தாண்டி அவன்வர,
விட்டுவந்த உயிரோ
அதேகப்பலேறி – பலகடல் தாண்டி
சென்றகதையின் உரிமையாளன்!!


பத்தோடு பதினொன்றாய்
அவன் சொல்லும் யதார்த்தங்களில்,
ஆங்கங்கே ஒளிந்து கொள்ளும்
அவன் காதலியின் நினைவுகள்!!!

காதலுக்கான கவிதைகளில்
அவன் பாகுபாடுகாட்டுவதில்லை,
அதன் மீதான விமர்சனங்களை
அவன் கண்டுகொள்வதும் இல்லை!!

ஒருசிலகாதல் மீது
வகையாக வாழ்த்துப்பாவும்,
பலகாதலர்கள் மீது
தொகையான சாபங்களையும்,
கவிதை வடிவில் சொல்வதில்
கெட்டிக்காரன்!!

ஓரிருவரின் கேள்விக்கு
ஊருக்கே பதில்சொல்லும்
வல்லமைபெற்றவர்களில்
அவனும் ஒருவன்!!

உயிர்க்காதல் தோல்வியின்
சாதனையாளர் விருதான
கருவளையங்கள் இரண்டை
தன் கண்களுக்கு பரிசளித்த
உத்தமன்!!

அவன்மீதான என் பிரியங்கள்,
அவன் என்பாலினம் என்பதையும்
மறக்கச்செய்து - அவன்மீது
காதல்கொள்ள தூண்டுகிறதே!!!

முஸ்பிக் இது உனக்காய் மட்டும் !!!
என்றென்றைக்குமாய்
உன்மீதான காதலுடன்

MuSthak!

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (13-Nov-12, 1:11 pm)
பார்வை : 334

மேலே