இரு துருவங்கள்....
நட்பிற்கு இலக்கணம் தந்தாய்!
எட்டுத்திக்கும் தேடியும் கிடைக்காத
பொக்கிஷமாய் கிடைத்தாய்!
அரவணைத்து செல்வதில் அன்னையானாய்!
அறிவுரை வழங்குவதில் தந்தையானாய்!
ஆறுதல் கூறுவதில் உடன்பிறப்பானாய்!
கற்றுத்தருவதில் ஆசானானாய்!
குறும்பு செய்வதில் குழந்தையானாய்!
அன்பு காட்டுவதில் வள்ளலானாய்!
பிறர் எள்ளி நகைக்கையில்
தட்டிக்கேட்கும் என் உணர்வானாய்!
இறுதியில்
என் கவிதையின் கருவுமானாய்!
இது அத்தனையும் உன்னில் கண்ட நான்
இன்று நாம் இரு துருவங்களாக மாறியதன்
விடை அறியாமல் போய்விட்டேனே????