ஆன்மா

நேருவின் கதையை
நெட்டுரு
செய்து கொண்டிருந்தான்
எனது மகன் அருணன்

அப்பா
நாம் இறந்த பிறகு
மேலுலகில்
நேருமாமாவை
பார்க்கலாமல்லவா என்றான்

எப்படி என்றேன்

மூச்சு நின்றவுடன்
பூலோகத்திலிருந்து
மேலோகம் சென்றால்
பார்க்கலாம் என்றான்

மூச்சு
மூஞ்சுறு வாகனத்தில்
செல்லுமா என்றேன்

நான் ஈ
திரைப்படத்தில்
ஈ முட்டையில்
ஆன்மா (மூச்சு) சென்றதென்றான்

ஆம்
மலத்தில் நெளியும்
புழுவாக கூட
ஆன்மா இருக்கலாம்
எதற்கும் திரும்பி பாருங்கள்

எழுதியவர் : அ, வேல்முருகன் (17-Nov-12, 11:18 pm)
சேர்த்தது : அ. வேல்முருகன்
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே