கவலையில்லாமல் காதலிப்பேன்

வானைக் கண்டேன் பறக்க நினைத்தேன்
மானைக் கண்டேன் பிடிக்க நினைத்தேன்
மீனைக் கண்டேன் நீந்த நினைத்தேன்
உன்னைக் கண்டேன் என்னை மறந்தேன்

காதல் என்பது ஒரு சிறுகதையா
காவியம் படைக்கும் பெருங்கதையா
கற்பனையில் பிறக்கும் குறுங்கவிதையா
கண்ணிலே தெரியும் புன்னகையா

தெரிந்தவர் எனக்கே சொல்லிடுவீர்
புரிந்தவர் விளக்கம் தந்திடுவீர்
அறிந்தவர் யாரேனும் இங்கிருந்தால்
அருகினில் அமர்ந்து வாழ்த்திடுவீர்

காதலில் விழுந்தவர் எழுந்ததுண்டோ
காரணம் யாதென்று புகன்றதுண்டோ
காட்டாறு போல் வரும் காதலையே
காளையரும் கன்னியரும் புகழ்ந்ததுண்டோ

கவிதை எழுதினால் காதலைத்தான்
கரைத்துக் குடித்தவர் போலேதான்
கருத்துமில்லாமல் கதையுமில்லாமல்
கண்டதை எழுதுவர் காதலர்தான்

காதலில் விழுந்த காளையரே உங்கள்
காதலில் சிக்கிய காதலியை எப்படித்தானோ
கடைசிவரை காத்திடுவீர் என்றே கொஞ்சம்
கூறிடுவீர் கவலையில்லாமல் காதலிப்பேன்


சூரிய ஜோதி

எழுதியவர் : சூரிய jothi (18-Nov-12, 8:32 am)
பார்வை : 148

மேலே