தீ மட்டும் பழகு

ஒருவர்
அளவுக்கு அதிகமாக
நட்பு பாராட்டினாலும்
நண்பராக முடியா..

நிறம் மாறாது.
சங்கு சுட்டாலும்
அதன் வெண்மை
என்றென்றும் ..

பொறுத்துக் கொள்ளல்...
மிகவும் விரும்பி
நண்பராக ஏற்றுக் கொண்டவர்களிடம்
சிற்சில குறைகள் இருந்தாலும்
நல்ல சான்றோர்களே ..!

நெல்லுக்கு உமி
குறை உண்டு
என்பதும் ..

பூவுக்கு புற இதழ்கள்
குறை உண்டு
என்பதும் ...

நற்சான்றோர்கள்
பெறும்
நல்ல நண்பர்கள்
மாண்பாம் ..

எரிகின்ற தீயில் புகை
இருப்பது போலவும்
நண்பர்களிடம்
குறைகள் இருக்கலாம்
வாழ்க்கையில் ...

தீ மட்டும்
பழகு
புகையை
அல்ல !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-Nov-12, 1:20 pm)
பார்வை : 153

மேலே