கண்ணாடி மனிதர்கள் ..2

பொன்னும் கரும்பும் புகழ் பாலும் சந்தனமும்
சின்னம்பட வருத்தம் செய்தலும் -முன்னிருந்த
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால்
நற்குணமே தோன்றும் நயந்து (நாலடியார் )
பாடலின் கருத்து
.
பொன்
தீயிலிட்டு உருக்கினாலும்
சுத்தியல் கொண்டு அடித்தாலும்
மாறுவதில்லை அதன்
இயற்கைத் தன்மையிலிருந்து
என்றுமே ...
இதுபோன்று தான் நற்குணம்
உடையவர்களும் ...

சுவை கூடும்.
ஆலையிட்ட செங்கரும்பும்
கரும்புச் சாறாக மாறினாலும்
குறையாது என்றுமே ..

மாறாதது .
பால் நிறம் தன் நிலையிலிருந்து..
தீயால் சூடேற்றினாலும்
அதன் நிறமும் தன்மையும்
என்றென்றும் ..

சந்தனம் .
இம் மரத்தினை சிறிய
துண்டுகளாக்கினாலும்
தூளாக்கினாலும்
மாறாதது அதன்
இயற்கை நறுமணத்தில் இருந்து
என்றென்றுமே ...

இத்தகைய கூற்று போல
மாறாதவர்கள்
பெரியோர்களும் ,சான்றோர்களும்
என்றென்றும் ..

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-Nov-12, 1:09 pm)
பார்வை : 190

மேலே