இயற்கை

நிலம் உழுது,
நீரிட்டு,
எருவிட்டும்
விதைத்த விதை
முளைக்காததால்,
வருத்தமுற்ற எனைப்
பார்த்து சிரித்தது
சுவரிடை
காகம் எச்சமிட்டு
விழுந்த விதையில்
துளிர் கிளம்பி
எழுந்த செடி!

எழுதியவர் : (19-Nov-12, 1:21 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 382

மேலே