தமிழ்ப்போராளிகள்

தமிழ்ப்போராளிகள்
வே.ம.அருச்சுணன் – மலேசியா
பன்னிரண்டு வயதினிலே
கடின உழைப்பாலே
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ஏழு ஏக்கள் பெற்று
அரிய சாதனைப் படைத்தாய்
தமிழ் அன்னை உன்னை
மனம் நிறைவுடன் வாழ்த்தும்.....!

தாய்மொழியைக் காக்க வந்த
இளம் தமிழ்ப்போராளியே
நீ எதிர்கொண்ட முதல் சோதனையிலேயே
வெற்றித் திலகத்தைச் சூட்டிக் கொண்டாய்
இனி வெற்றிகள் உன்னைத் தழுவட்டும்
தடையின்றி சாதனைகள் தொடரட்டும்......!

உன் வெற்றியால்
தமிழ்மொழி ஆலமரமாய்
இந்நாட்டில் செழித்து வளரும்
தமிழர் உள்ளங்களில் செம்மொழியாய்
அரியணையில் அமரும்
ஓங்கி நிற்கும் தமிழ்ப் பள்ளிகள்
அடுத்த தலைமுறைக்கும்
தமிழனின் புகழுரைக்கும்......!

தமிழ் சோறு போடுமா......?
என்போருக்கு தமிழ் எப்போதுமே
உயிர் கொடுக்கும்
தமிழனின் அடையாளத்தை உலகுக்கு
உரக்கக் கூறும்.......!

தமிழை மறந்தோன்
தாயை மறந்தவனாவான்
தமிழை இகழ்ந்தவன்
தாயை இகழ்ந்தவனாவான்
தமிழ்ப்போராளியே
இனி உன்னால் மட்டுமே தமிழ் வாழும்.....!

நெஞ்சை உயர்த்திக்காட்டு
தமிழ்ப்பால் உண்டோன்
உலகை ஆளப்பிறந்தவன் என்பதை
ஞானத்தால் உணர்த்திடு.....!

உன் வெற்றிக்கு வித்திட்ட
மாதா,பிதா,குரு,தெய்வம்
ஆகிய நால்வரை மறவாமல் வணங்கிடு
அகிலம் உன்னை வாழ்த்திடும்.........!

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (19-Nov-12, 5:03 pm)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 223

மேலே