கடல்

உள்ளம் அள்ளும் முத்தும் பவளமும்
மறைந்து கிடக்கும் சுரங்கம்!
துள்ளும் வெள்ளலைகள் இரைந்து
நடனம் கற்கும் பயிலரங்கம்!

அலையின் அழைப்பில் வானின் நிறமது
கடலின் மடியில் இறங்கும்!
ஓயாது உழைத்து உருளும்
அந்த கடலலை என்று உறங்கும்!

எழுதியவர் : (19-Nov-12, 1:19 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 1176

மேலே